ராம் சரண் தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார். 2007ம் ஆண்டு சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்பட துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் நந்தி விருது, பிலிம்பேர் விருது போன்ற பல விருதுகளை வென்றார். இவர் தெலுங்கு திரைப்பட சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ஆவார்.
இவர் தமிழ்நாடு மாநிலம், சென்னையில் பிறந்தார். இவரின் தந்தை சிரஞ்சீவி மற்றும் தாய் சுரேகா சிரஞ்சீவி ஆவார். இவரின் குடும்பம் ஒரு திரைப்பட கலை குடும்பம் ஆகும். இவர் டிசம்பர் 1ம் திகதி 2011ம் ஆண்டு உபாசனா காமினேனி என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
2007ம் ஆண்டு சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்பட துறைக்கு அறிமுகமானார். இந்த திரைப்படம் 50 நாட்களை கடந்து ஓடியது. இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் நந்தி சிறப்பு நடுவர் விருது வென்றார். இந்த திரைப்படம் தமிழ் மொழியில் சிறுத்தை புலி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 2012ம் ஆண்டு வெளியானது.
2009ம் ஆண்டு மாவீரன் என்ற திரைப்படத்தில் இவர் இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படத்தை இராஜமௌலி இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் மெகா ஹிட் திரைப்படம் ஆகும், மற்றும் வசூலிலும் மிக பெரிய வெற்றி கண்டது.
மாவீரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 2010ம் ஆண்டு ஆரஞ்சு, 2012ம் ஆண்டு ரச்சா, 2013ம் ஆண்டு நாயக், 2014ம் ஆண்டு Yevadu போன்ற தெலுங்கு திரைப்படத்திலும் Zanjeer என்ற ஒரு ஹிந்தி திரைப்படத்திலும் நடித்து இருந்தார், இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்து இருந்தார், இந்த திரைப்படம் தெலுங்கு மொழியில் Thoofan என்ற மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.
இவர் தற்பொழுது Govindudu Andarivadele என்ற திரைப்படத்தில் நடித்து கொண்டு இருக்கின்றார். இவருக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கின்றார்.
இவர் நடித்த திரைப்படங்கள்
சிறுத்தை, மாவீரன், ஆரஞ்சு, ரச்சா, நாயக்