Saturday, February 14
Shadow

Tag: #வரலட்சுமி சரத்குமார்

சரத்குமாரின் அடுத்த ஆட்டம் விரைவில் ஆரம்பம்

சரத்குமாரின் அடுத்த ஆட்டம் விரைவில் ஆரம்பம்

Latest News, Top Highlights
ஏய்', `சாணக்யா', `சண்டமாருதம்’ படங்களுக்கு பிறகு சரத்குமார் - இயக்குனர் ஏ.வெங்கடேஷ், ‘பாம்பன்’ படத்தின் மீண்டும் இணைந்திருக்கின்றனர். இப்படத்தில் சரத்குமார் வித்தியாசமான வேடத்தில் பாம்பன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமாரின் மகள் வரலட்சுமியும் நடிக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் இந்த படத்திற்கு என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். எஸ்.எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. சமீபத்தில் தொடங்கிய இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அடுத்தக் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்க...
தனது அடுத்த படத்தின் முக்கிய தகவலை வெளியிட்ட தனுஷ்

தனது அடுத்த படத்தின் முக்கிய தகவலை வெளியிட்ட தனுஷ்

Latest News, Top Highlights
`வடசென்னை', `எனை நோக்கி பாயும் தோட்டா' படங்களின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், `மாரி-2' படத்தின் படப்பிடிப்பும் இன்று துவங்கியிருப்பதாக தனுஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகும் `மாரி-2' படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். கிருஷ்ணாவும், வரலட்சுமி சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிக்கிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்திற்கான பூஜை கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. சமீபத்தில் இந்த படத்தில் ஒரு பாடலை இளையராஜா பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியிருக்கிறது....
கொடைக்கானலில் விஷால் – கீர்த்தி சுரேஷ் காதல்

கொடைக்கானலில் விஷால் – கீர்த்தி சுரேஷ் காதல்

Latest News, Top Highlights
விஷால் தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் `இரும்புத்திரை' படத்திலும், லிங்குசாமி இயக்கத்தில் `சண்டக்கோழி-2' படத்திலும் நடித்து வருகிறார். இதில் `சண்டக்கோழி-2' படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லிங்குசாமி இயக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடிக்கிறார். ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், சண்டக்கோழி 2 படத்தின் பாடல் காட்சிக்காக விஷால் மற்றும் கீர்த்தி சுரேஷ் படக்குழுவினருடன் கொடைக்கானலுக்குச் சென்றுள்ளனர். இப்படத்தின் முதல் பாதி படப்பிடிப்பு முடிந்த நிலையில், இரண்டாவது பாதி திண்டுக்கலில் தொடங்குகிறது. அங்கு படத்தின் பாடல் காட்சிகளை படமாக்கவும், விஷால் - கீர்த்தி சுர...
`மாரி-2′ படக்குழுவில் இணைந்த மற்றொரு முன்னணி நடிகை

`மாரி-2′ படக்குழுவில் இணைந்த மற்றொரு முன்னணி நடிகை

Latest News, Top Highlights
வெற்றிமாறன் இயக்கத்தில் `வடசென்னை', கவுதம் மேனன் இயக்கத்தில் `எனை நோக்கி பாயும் தோட்டா' என ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த இரு படங்களை முடித்த பிறகு அடுத்ததாக பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2' படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி ஒப்பந்தமாகி இருந்த நிலையில், நடிகை வரலட்சுமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமசும், முக்கிய கதாபாத்திரத்தில் கிருஷ்ணாவும் நடிக்கின்றனர். தனுஷ் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 10 வருடங்களுக்கு பிறகு தனுஷ் படத்திற்கு அவரது நண்பர் யுவன் ஷங்கர் ராஜா இசைமைக்கிறார் என்பது கு...