Wednesday, February 12
Shadow

சரத்குமாரின் அடுத்த ஆட்டம் விரைவில் ஆரம்பம்

ஏய்’, `சாணக்யா’, `சண்டமாருதம்’ படங்களுக்கு பிறகு சரத்குமார் – இயக்குனர் ஏ.வெங்கடேஷ், ‘பாம்பன்’ படத்தின் மீண்டும் இணைந்திருக்கின்றனர். இப்படத்தில் சரத்குமார் வித்தியாசமான வேடத்தில் பாம்பன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமாரின் மகள் வரலட்சுமியும் நடிக்கிறார்.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் இந்த படத்திற்கு என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். எஸ்.எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. சமீபத்தில் தொடங்கிய இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அடுத்தக் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.

இந்த படத்தை செப்டம்பரில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.