Wednesday, May 31
Shadow

Tag: வாழ்க்கை

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி படப்பிடிப்பு துவக்கம்

Latest News, Top Highlights
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்துக்கான வேலைகள் துவங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏ.எல் விஜய் இயக்கும் இந்தத் திரைப்படத்தில் ஜெயலலிதாவின் வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளார். தமிழில் தலைவி என்ற பெயரிலும் இந்தியில் ஜெயா என்ற பெயரிலும் திரைப்படம் வெளியாகிறது. இதற்காக கங்கனா ரனாவத் பிரத்யேகமாக பயிற்சி பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாடல் காட்சிகளோடு தொடங்குகிறது. 100 நடனக் கலைஞர்களுடன் பரத நாட்டியமாடும் வகையில் பாடல் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. ...
எம்.ஜி.ஆர் – எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது

எம்.ஜி.ஆர் – எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது

Latest News, Top Highlights
அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என்று பலரின் வாழ்க்கை வரலாற்று படங்கள் தற்போது உருவாகிவருகிறது. அந்த வகையில், எம்.ஜி.ஆர் - எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. எம்.ஆர்.ராதாவின் பேரனான ஐக் இயக்கும் இந்த படத்தை ராதிகா சரத்குமார் தயாரிக்கவுள்ளார். இந்நிலையில், இந்த படத்தில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிக்க அரவிந்த்சாமியிடமும், எம்.ஆர்.ராதா கதாபாத்திரத்தில் நடிக்க சிம்புவிடமும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் எம்.ஜி.ஆருக்கும், எம்.ஆர்.ராதாவுக்கும் ஏற்பட்ட மோதல். எம்.ஜி.ஆரை, எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட சம்பவம் உள்பட பல முக்கிய காட்சிகள் இடம்பெறும் என்றும் தெரிய வந்துள்ளது....
கபில்தேவ் வாழ்க்கை வரலாறு படமான “83” ரீலிஸ் தேதி அறிவிப்பு

கபில்தேவ் வாழ்க்கை வரலாறு படமான “83” ரீலிஸ் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
கிரிக்கெட் வீரர் கபில்தேவ் பயோபிக் படத்தில் முக்கிய கேரக்டரில் ‘அர்ஜுன் ரெட்டி’ நாயகன் விஜய் தேவரகொண்டா ஒப்பந்தமாகியுள்ளார்.  ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ரசிகர்களை பெரிதாக ஈர்த்த நடிகர் விஜய் தேவ்ரகொண்டா தற்போது பாலிவுட்டில் களமிறங்கவுள்ளார். கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டராக ஜொலித்த கபில் தேவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘83’ படத்தில் விஜய் தேவாரகொண்டா நடிக்கிறார். இயக்குநர் கபீர்கான் இயக்கத்தில் உருவாகி வரும் ‘83’ படத்தில் கபில் தேவ் கேரக்டரில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கிறார். இப்படத்தில் தமிழக கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தின் கேரக்டரில் விஜய்தேவரகொண்டா நடிக்கிறார்.  இந்நிலையில் இந்த படம் வரும் 2020 ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....
பிரதமர் மோடி வாழ்க்கை வரலாற்று படத்தின் ரீலிஸ் தேதி அறிவிப்பு

பிரதமர் மோடி வாழ்க்கை வரலாற்று படத்தின் ரீலிஸ் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
இந்திய சினிமாவில் சமீபகாலமாக புகழ்பெற்ற பிரபலங்களின் பயோபிக் திரைப்படங்கள் உருவாவது வழக்கமாகி வருகிறது. கிரிக்கெட் பிரபலங்கள் தோனி, சச்சின் மற்றும் மன்மோகன் சிங் போன்றவர்களின் திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த வரிசையில் உருவாக்கியுள்ளது தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறை விவரிக்கும் திரைப்படம் இந்த திரைப்படம் 23 மொழிகளில் தயாராகியுள்ளது. இத்திரைப்படத்தில் பிரதமர் மோடியாக விவேக் ஓபராய் நடித்துள்ளார். பிஎம் நரேந்திர மோடி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் 5-ஆம் நாள் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விவேக் ஓப்ராய் மோடி வேடத்தில் தோன்றும் 9 வித ’கெட்டப்’ கொண்ட போஸ்ட்டர்களும் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இவருடன் போமன் இரானி, பர்கா பிஷ்ட், மனோஜ் ஜோஷி, ஜரினா வஹாப், பிரஷாந்த் நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் போஸ்ட்டரு...