
அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என்று பலரின் வாழ்க்கை வரலாற்று படங்கள் தற்போது உருவாகிவருகிறது. அந்த வகையில், எம்.ஜி.ஆர் – எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. எம்.ஆர்.ராதாவின் பேரனான ஐக் இயக்கும் இந்த படத்தை ராதிகா சரத்குமார் தயாரிக்கவுள்ளார். இந்நிலையில், இந்த படத்தில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிக்க அரவிந்த்சாமியிடமும், எம்.ஆர்.ராதா கதாபாத்திரத்தில் நடிக்க சிம்புவிடமும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் எம்.ஜி.ஆருக்கும், எம்.ஆர்.ராதாவுக்கும் ஏற்பட்ட மோதல். எம்.ஜி.ஆரை, எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட சம்பவம் உள்பட பல முக்கிய காட்சிகள் இடம்பெறும் என்றும் தெரிய வந்துள்ளது.