விஜய் டான்ஸ் என்றால் எனக்கு உயிர் ட்ராபிக் ராமசாமி நாயகி உபாசனா
தமிழ் சினிமா என்கிற முத்தெடுக்கும் கடலில் முத்தெடுக்க எல்லா மா நிலங்களில் இருந்தும் எவ்வளவோ புதுமுகங்கள் நாள் தோறும் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்..
அப்படி புகழ் எனும் முத்தெடுக்க வங்காளத்திலிருந்து வந்திருப்பவர் தான் உபாசனா RC..
தமிழில் அறிமுகம் 88 என்கிற படத்தின் மூலம் என்கிற இவர் திரை அறிமுகம் என்னவோ முதலில் கன்னட படம் மூலமாகத் தான்.
சுமார் 80 விளம்பரப் படங்களின் மூலம் மக்களிடம் நல்ல அறிமுகமாநவர் இவர்..
டிராபிக் ராமசாமி படம் எனக்கு நல்ல அடையாளத்தை கொடுத்திருக்கிறது..
ஒரு நல்ல கதையம்சமுள்ள படத்தில் நடித்தது பெருமையாக இருக்கு...
எனக்கு சின்ன வயசிலிருந்தே சினிமா மீது ஆர்வம் உண்டு....
அதனால் பரதனாட்டியம் கிளாசிகல் டான்ஸ் கத்துக்கிட்டேன்.
அப்பா அம்மா பிறந்தது வங்காளம் ..நான் பிறந்தது குஜராத். படித்தது கர்நாடகா, இப்போ வாழ்வது தமிழ் நாட்டில்... ஆக இந்தியா முழுக்க ...
