Saturday, February 14
Shadow

Tag: #விஷால் #ஆர்.கே.நகர் #ஆர்.கே.நகர் #இடைத்தேர்தல்

ஆர்.கே.நகரில் நடிகர் விஷால் வேட்பு மனுத்தாக்கல்

ஆர்.கே.நகரில் நடிகர் விஷால் வேட்பு மனுத்தாக்கல்

Latest News, Top Highlights
காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக நடிகர் விஷால் ஆர்.கே.நகரில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். ஜெயலலிதா மறைவால் காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு வருகிற 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அ.தி.மு.க. சார்பில் மதுசூதனனும், தி.மு.க. சார்பில் மருது கணேஷும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக கடந்த சனிக்கிழமை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இன்று ஆர்.கே.நகர் சென்ற விஷால் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். முன்னதாக காமராஜர், எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விஷால் அண்ணா, ஜெயலலிதா நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார். பின்னர், ஆர்.கே.நகர் சென்ற விஷாலுக்கு 68வது டோக்கன் வழங்கப்பட்டது. இதையடுத்து 4.20 மணியளவில் தேர்தல் அதிகாரிய...