நாளை வெளியாகிறது கே.ஜி.எஃப் சேப்டர் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…..
கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்தின் வில்லன் சஞ்சய் தத்தின் போஸ்டர் நாளை வெளியிடப்படவுள்ளது.
கன்னட ஹீரோ யஷ் நடித்திருந்த கே. ஜி. எஃப் திரைப்படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. கன்னடம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியிலும் இந்த படம் வெளியாகி பிரமாண்ட வசூலை குவித்தது. இதனை தொடர்ந்து கே.ஜி.எஃப் சேப்டர் 2 படம் தற்போது உருவாகி வருகிறது.
இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்து வருகிறார். நாளை சஞ்சய் தத் பிறந்த நாள் என்பதால் அவருக்கு வாழ்த்துக் கூறும் விதமாக சஞ்சய் தத் போட்டோவுடன் கே.ஜி.எஃப் சேப்டர் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. இயக்குனர் பிரசாந்த் நீல் இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
"The only way is the BRUTAL way!!" என அவர் அந்த ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். இ...