Wednesday, October 28
Shadow

Tag: #வேட்புமனு #ஆர்.கே.நகர் #இடைத்தேர்தல் #விஷால் #Vishal #Nomination #RKNagar #RKNagarByElection

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: விஷாலின் வேட்புமனு மீண்டும் ஏற்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: விஷாலின் வேட்புமனு மீண்டும் ஏற்பு

Latest News, Top Highlights
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நிராகரிக்கப்பட்ட விஷாலின் வேட்பு மனு மீண்டும் ஏற்கப்பட்டது. நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்திருந்தார். இன்று மாலை இவரின் மனுதாக்கலை நிராகரித்தது தேர்தல் ஆணையம். நடிகர் விஷால் தரப்பினர் தேர்தல் ஆணையரிடம் கேட்ட போது சில ஆவணங்களின் குளறுபடியால் நிராகரித்துவிட்டது என்று தேர்தல் ஆணையர் கூறினார். இதை ஏற்க மறுத்த விஷால் நான் அளித்த ஆவணங்களை மறுஆய்வு செய்யும் படி கேட்டுக் கொண்டார். திடீர் திருப்பமாக மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், சில திருத்தங்களுக்கு பிறகு நடிகர் விஷாலின் மனுதாக்கல் ஏற்கப்பட்டது. இது போன்ற ஒரு சம்பவம் தமிழக அரசியல் வரலாற்றிலே நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது....
ஆர்.கே.நகர் தேர்தல்: விஷாலின் வேட்பு மனு நிராகரிப்பு

ஆர்.கே.நகர் தேர்தல்: விஷாலின் வேட்பு மனு நிராகரிப்பு

Latest News, Top Highlights
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நேற்று மனுத் தாக்கல் செய்த விஷாலின் மனு நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அ.தி.மு.க., தி.மு.க., டி.டி.வி. தினகரன், பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி, ஜெ.தீபா, நடிகர் விஷால் உள்ளிட்ட பலரும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்றுடன் முடிந்தது. கடந்த வெள்ளிக்கிழமை வரை 30 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். கடைசி நாளான நேற்று பாஜக சார்பில் கரு.நாகராஜன் மனுதாக்கல் செய்தார். மேலும் விஷால், தீபா உள்ளிட்ட சிலரும் மனுதாக்கல் செய்தனர். இந்நிலையில், நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணைய விதிகளின்படி ஒரு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் நபரை அந்த தொகுதி வாக்காளர் பட்டி...