Saturday, April 18
Shadow

Tag: ஆனந்த் சங்கர்

நோட்டாவுக்கு மாறிய விஜய் தேவரகொண்டா

நோட்டாவுக்கு மாறிய விஜய் தேவரகொண்டா

Latest News, Top Highlights
‘அரிமா நம்பி’ ‘இருமுகன்’ படங்களை இயக்கிய ஆனந்த்சங்கர் அடுத்ததாக காதல் கலந்த ஆக்‌ஷன் படத்தை இயக்கவிருக்கிறார். அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் நடித்த மெஹ்ரீன் பிர்சாடா நடிக்கிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. பூஜையில் நாயகன் விஜய் தேவரகொண்டா, மெஹ்ரீன் பிர்சாடா, இயக்குனர் ஆனந்த் சங்கர், தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் பங்கேற்றனர். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் சத்யராஜ், நாசர் முக்கிய கதபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர். இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி இருக்கிறது. இப்படத்திற்கு ‘ந...
இருமுகன் இயக்குனருடன் இணையும் அர்ஜுன் ரெட்டி நாயகன்

இருமுகன் இயக்குனருடன் இணையும் அர்ஜுன் ரெட்டி நாயகன்

Latest News, Top Highlights
‘அரிமா நம்பி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆனந்த் சங்கர். அதனைத் தொடர்ந்து விக்ரமை வைத்து ‘இருமுகன்’ படத்தை இயக்கினார். இரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருக்கும் இந்த படத்தில், நயன்தாரா, நித்யாமேனன், நாசர், தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். ரசிகர்களிடையேயும், வணீக ரீதியாகவும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து ஆனந்த் சங்கர் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும், அதனை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க இருப்பதாகவும் நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படத்தின் கதாநாயகன் யார் என்பதில் புதிர் வைத்திருந்தார் ஞானவேல் ராஜா. இந்த புதிருக்கு பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், இன்று காலை இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தெலுங்க...