ஆர்யா விட்ட டோஸ்… நம்பியார் படத்தில் ஸ்ரீகாந்திற்கு நேர்ந்த ஒரு தர்மசங்கடம்
அறிமுகமானபோது எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கிறார் ஸ்ரீகாந்த்.
இளமையில் மட்டுமல்ல உற்சாகத்திலும்.. காரணம் முதன்முறையாக
தயாரிப்பாளராகவும் காலடி எடுத்துவைத்திருக்கும் நம்பியார் படம் ஆகஸ்ட்
19ல் ரிலீஸாகவிருப்பதுதான். அறிமுக இயக்குனர் கணேஷா இயக்கத்தில்
ஸ்ரீகாந்த், சந்தானம், சுனைனா நடிப்பில் உருவாகி இருக்கும் நம்பியார்
படத்தை வெளியிடவிருப்பது ஸ்ரீகாந்தின் சொந்த நிறுவனமான கோல்டன் ஃப்ரைடே
ஃபிலிம்ஸ். ஸ்ரீகாந்திடமே பேசுவோம்…
நம்பியார் என்ன சொல்றார்?
சினிமாக்களில் நல்லது செய்பவர் எம்ஜிஆர். கெட்டது செய்பவர் நம்பியார்.
இது எல்லா சினிமா ரசிகர்களுக்கும் தெரியும். எம்ஜிஆருக்கு வில்லங்கம்
செய்பவர் நம்பியார். அதுபோலவே ஒவ்வொரு மனிதனின் மனதிலும் நல்லதும்
இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது. இரண்டும் கலந்த கூட்டணி தான் மனிதனின்
மனது. ஒரு பக்கம் நல்ல சிந்தனைகள் மேலோங்கும்போது கெட்ட சிந்தனைகள்
அத...
