இசையமைப்பாளர் ஆர். சுதர்சனம் பிறந்த தின பதிவு
ஆர். சுதர்சனம் தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். ஏவி.எம்.,மின் ஆஸ்தான இசை அமைப்பாளரான இவர்...நாம் இருவர் படத்தில் பாரதி பாடல்களுக்கு இசையை பிரமாதமாக அமைத்துள்ளார்.அவற்றில் ஒரு பாடல் "ஆடுவோமே..பள்ளு பாடுவோமே"
அறிஞர் அண்ணாவின்..திரைக்கதை வசனத்தில் வந்த ஓர் இரவு படத்தில்..'அய்யா சாமி' பாடலும்...'துன்பம் நேர்கையில்' பாடல்கள் இவர் இசை அமைத்தவை.பிந்தைய பாடலின் ஆசிரியர் பாரதிதாசன்.
களத்தூர் கண்ணம்மா படப்பாடல்கள் அருமை.'ஆடாத மனமும்' 'அருகில் வந்தாள்' குறிப்பிடத்தக்கவை.
கொஞ்சும் சலங்கை..'சிங்கார வேலனே' இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
தெய்வப்பிறவி..'அன்பால தேடிய" மறக்க முடியா பாடல்.
அன்னை படத்தில்..பானுமதி பாடிய "அன்னை என்பவள்'பாடல்,சந்திரபாபு பாடிய 'புத்தியுள்ள மனிதரெல்லாம்" இவர் திறமைக்குச் சான்று.
காட்டு ரோஜா படத்தில்...'ஏனடி ரோஜா" பாடலும்..பி.பி.ஸ்...


