Friday, September 30
Shadow

பெண் குழந்தைக்கு அப்பா ஆனார் இசையமைப்பாளர் அம்ரீஷ்

இசையமைப்பாளர் அம்ரீஷ் – கீர்த்தி தம்பதிகளுக்கு நேற்று மதியம் 2.20 மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது…இது இந்த தம்பதியின் முதல் குழந்தையாகும்.

தமிழ் படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிவரும் இசையமைப்பாளர் அம்ரீஷ், நடிகை ஜெயசித்ராவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அம்ரீஷ், ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் தற்போது சார்லி சாப்ளின் 2 படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘சின்ன மச்சான் செவத்த மச்சான்’ பாடல் சமீபத்தில் வெளியானது. விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் பட்டம் பெற்ற செந்தில் கணேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி இணைந்து பாடிய இந்த பாடல் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. யூடியூபில் மட்டும் சுமார் 53 லட்சம் பார்வையாளர்கள் இப்பாடலைக் கண்டு களித்திருக்கிறார்கள். தனது இசையில் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தின் சின்ன மச்சான் பாடல் சூப்பர் ஹிட்டானதால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார் அம்ரீஷ்.

இப்ப தமிழ், தெலுங்குனு அரை டஜன் படங்கள் இவர் கைவசம் இருக்கு. அதுல பிரபுதேவா மாஸ்டரோட ‘யங் மங் ஜங்’கும் அடக்கம்.’

இவர் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி கீர்த்தி ஹன்ஷா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அம்ரீஷ் – கீர்த்தி தம்பதிகளுக்கு நேற்று மதியம் 2.20 மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.