உலக உணவு தினத்தையொட்டி ஃபுட் பேங்க் சென்னை உணவு வழங்கும் நிகழ்ச்சி
உலக உணவு தினத்தையொட்டி ஃபுட் பேங்க் சென்னை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் பிரம்மாண்ட உணவு வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னை முழுதும் ஒரு வேளை உணவின்றி தவிக்கும் ஏழை, ஆதரவற்ற, சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு நேரடியாக சென்று தனனார்வல்ர்கள் உணவு பொட்டலங்களை வழங்கினர். இதுவரை லட்சத்திற்கும் அதிகமான உணவு பொட்டலங்களை இவ்வாறு வழங்கியுள்ள ஃபுட் பேங்க் இந்தியா அமைப்பு ஊட்ட சத்து குறைபாடு மற்றும் உணவு பற்றாக் குறையை இந்தியாவிலிருந்து அகற்றும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.
சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் SP லாவண்யா இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். “ உலக உணவு தினமான இன்று இத்தகைய பிரமாண்ட உணவு வழங்கும் நிகழ்வை ஒன்றிணைத்த ஃபுட் பேங்க் இந்தியா அமைப்பாளர் சிநேகா மோகன்தாஸ் மற்றும் தன்னார்வலகளை பாராட்டினார். உணவின் மகத்துவம் அதற்காக தவிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும், நாம் அனைவரு...
