காஜல் அகர்வாலை நெகிழவைத்த அஜித்
சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். மேலும் வில்லனாக விவேக் ஓபராய், கருணாகரன், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
இந்நிலையில் 'கவலை வேண்டாம்' படத்தை விளம்பரப்படுத்த சென்னை வந்திருந்தார் காஜல் அகர்வால். அவரிடம் அஜித்துக்கு நாயகியாக நடிப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு "என்னால் அவரைப் புகழ்வதை நிறுத்த முடியாது ஏனென்றால் அவர் மீது அதிக மரியாதை வைத்துள்ளேன். அந்த மனிதரைப் பார்த்து மெச்சுகிறேன். அவரது நடிப்புக்கு மட்டுமல்ல, ஒரு மனிதராக அவரிடம் அதிக மரியாதை கொண்ட...
