கார்கி திரை விமர்சனம் (ரேட்டிங் 4.5)
சாய் பல்லவி நடிப்பில் சூர்யா, ஜோதிகாவின் 2டி நிறுவனம் வெளியிட்டுள்ள 'கார்கி' படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
ஒன்பது வயது குழந்தையை நான்கு வடமாநில இளைஞர்கள் கற்பழித்து விடுகின்றனர். இந்த செய்தி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது. இந்த குற்ற செயலில் ஈடுபட்ட ஐந்தாவது நபராக சாய் பல்லவியின் அப்பா ஆர்.எஸ். சிவாஜியும் கைதாகிறார். இதனால் சாய்பல்லவி குடும்பம் பெறும் இன்னல்களுக்கு ஆளாகிறது. சட்ட போராட்டங்களின் மூலம் தனது அப்பாவை மகள் காப்பாற்றினாரா?இறுதியில் அவருக்கு என்ன ஆனது என்பதே கார்கி படத்தின் கதை.
கார்கி படத்தில் சாய் பல்லவி பள்ளி ஆசிரியராக நடித்துள்ளார். எந்தவித பெரிய மேக்கப்பும் இல்லாமல், மிகவும் எளிமையாக படம் முழுக்க நமது பக்கத்து வீட்டு பெண் போலவே காட்சியளிக்கிறார். சாய்பல்லவியின் எதார்த்தமான நடிப்பும், அழுத்தமான திரைக்கதையும் படத்தின் வெற்றிக்கு வலு சேர்க்க...
