Saturday, April 18
Shadow

Tag: #கீர்த்திசுரேஷ்

என் படத்தில் மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இல்லை: சூர்யா

என் படத்தில் மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இல்லை: சூர்யா

Latest News, Top Highlights
ஸ்டுடியோ கீரீன் K.E. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் சூர்யா, தயாரிப்பாளர் K.E. ஞானவேல்ராஜா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், தம்பி ராமையா, சுரேஷ் மேனன், இயக்குநர் விக்னேஷ் சிவன், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், கலை இயக்குநர் கிரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். விழாவில் சூர்யா பேசியது :- அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் எல்லா கனவுகளும் சிறப்பாக நிறைவேறவேண்டும். நமது துறையிலிருந்து அடுத்த பயணத்தை துவங்கயிருக்கும் ரஜினி சார் அவர்களுக்கும், கமல் சார் அவர்களுக்கும் விஷால் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். எல்லாருடைய வரவும் நல்வரவாக இருக்கவேண்டும். எங்கள் அனைவரின் ஆதரவும் அவர்களுக்கு உண்டு. இப்போது விக்னேஷ் சிவன் கூறியது போன்று எப்படி எனக்கு ஓவ்வொரு டைரக்டர் முக்கியமோ...
சண்டக்கோழி 2 படத்தின் புதிய அப்டேட்

சண்டக்கோழி 2 படத்தின் புதிய அப்டேட்

Latest News, Top Highlights
மிஷ்கினின் ‘துப்பறிவாளன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சண்டக்கோழி 2’. லிங்குசாமி இயக்கிவரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக உள்ளது. ஏனெனில், இதன் முதல் பாகம் 2005-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இதில் விஷாலுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடித்திருந்தார். மேலும், ராஜ்கிரண், கஞ்சா கருப்பு, தலைவாசல் விஜய், சண்முகராஜன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. இந்த இரண்டாம் பாகத்திலும் ராஜ்கிரண் நடித்து வருகிறார். விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நெகட்டிவ் ஷேடில் வரலக்ஷ்மி சரத்குமார், ஹரீஷ் பெராடி ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு சக்தி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் பிலிம் பேக்டரி’ மூலம் தயா...
தமிழ்ப் புத்தாண்டை குறி வைத்த விஷால்

தமிழ்ப் புத்தாண்டை குறி வைத்த விஷால்

Latest News, Top Highlights
விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் `இரும்புத்திரை'. இதில் சமந்தா கதாநாயகியாக நடித்துள்ளார். மித்ரன் இயக்கியுள்ள இப்படம் ஜனவரி 26ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் `சண்டக்கோழி-2' படத்தின் ரிலீஸ் தேதியை விஷால் அறிவித்தார். `சண்டக்கோழி-2' படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லிங்குசாமி இயக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் ராஜ்கிரன், சதீஷ், சூரி, உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்....
இன்று ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தளிக்கும் சூர்யா

இன்று ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தளிக்கும் சூர்யா

Latest News, Top Highlights
சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் `தானா சேர்ந்த கூட்டம்' படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு ரிலீசாக இருக்கிறது. விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் இப்படத்தில் சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். நவரச நாயகன் கார்த்திக், செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து படத்தின் வியாபாரமும் சூடுபிடித்துள்ளது. மேலும் லைக் மற்றும் பார்வையாளர்களில் இந்திய அளவில் இரண்டாவது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் தெலுங்கு பதிப்பான `கேங்' படத்தின் டீசர் இன்று வெளியாக இருப்பதாக தெலுங்கு உரிமையை கைப்பற்றியிருக்கும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் அறிவித்து...