குற்றமே தண்டனை – திரை விமர்சனம் (ரசனையின் அறிகுறி) RANK5/3.5
நாம் செய்யும் தப்புக்கு நிச்சயம் தண்டனை உண்டு என்பதை சொல்லும் படம் குற்றமே தண்டனை அரசன் அன்று கொன்றால் நின்று கொள்ளும் என்ற பழமொழிக்கு உதாரணம் தான் இந்த கதை என்றும் சொல்லலாம்
“காக்கா முட்டை” இயக்குனர் எம் மணிகண்டன் தன் முதல் படம் மாதிரியே ஒளிப்பதிவும் செய்திட நட்சத்திரங்கள் : விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா தேவாரியா, ரஹ்மான், நாசர், ‘ஜோக்கர்’ குருசோமசுந்தரம், மாரிமுத்து, ராஜசேகர், அனுசரன், யோகி பாபு, பசிசத்யா… உள்ளிட்டோர் நடித்தும் இருக்கும் ஒரு மணி நேரம் நாற்பது நிமிட க்ரைம் த்ரில்லர், திரைப்படம் தான் “குற்றமே தண்டனை.”
பிறந்ததிலிருந்தே சற்றே கண் பார்வை குறைபாடு உடையவர் விதார்த். எல்லோரும் போல் சரியாக பார்க்கத் தெரியாத அவருக்கு, கண் அறுவை சிகிச்சைக்காக மூன்று லட்சத்து இருபதாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. தான் கலெக்ஷன் பாயாக வேலை பார்க்கும் வங்கி கிரிடிட் கார்டு கடன் கலெக்ஷன் ஏஜென்சிய...
