கூர்கா திரை விமர்சனம் ( செம ஜாலி) Rank 3.5/5
தர்மபிரபு படத்தைத் தொடர்ந்து யோகி பாபு கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘கூர்க்கா'. சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு, கனடா அழகி எலிஸ்சா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். காமெடி, ஆக்ஷன் கலந்த படமாக உருவாகி வரும் கூர்காவில் நாயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
மால் ஒன்றில் கூர்காவாக இருக்கும் யோகி பாபு, அந்த மாலில் சிறை பிடிக்கப்பட்ட அமெரிக்க தூதரை (இந்த கேரக்டரில் கனடா மாடல் எலிசா நடித்துள்ளார்) எப்படி காப்பற்றினார் என்பதே படத்தின் கதை.
கூர்க்கா யோகிபாபு, அமெரிக்க தூதரை காப்பாற்று பணியை ஒரு நாயின் உதவியுடன் செய்வார். இந்த நாய் படத்தில் முக்கிய பங்காற்றியுள்ளது.
ஹீரோ என்பதற்காக யோகிபாபுவை வித்தியாசமான கெட்டப், பந்தாவான பில்டப் என்றெல்லாம் காட்டாமல் மற்ற படங்களில் எப்படி வருகிறாரோ அப்படியே காட்டிய இயக்குநர் நடிப்பில் மட...
