வரலாற்று படத்தில் இருந்து அமலாபால் விலகல்
கேரளாவின் புகழ்பெற்ற காயம்குளம் கொச்சுண்ணியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் இருந்து நடிகை அமலாபால் வெளியேறியிருக்கிறார்.
கேரளாவில் புகழ்பெற்ற காயம்குளம் கொச்சுண்ணியின் வாழ்க்கை படமாக்கப்பட உள்ளது.
'36 வயதினிலே' படத்தை இயக்கிய ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கும் இந்த படத்தில் காயம்குளம் கொச்சுண்ணியாக நிவின்பாலி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அமலாபால் ஒப்பந்தமாகி இருந்த நிலையில் படத்தில் இருந்து அமலாபால் வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமலா பாலுக்கு பதிலாக ப்ரியா ஆனந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பெரும் பொருட்ச்செலவில் பிரம்மாண்டமாய் உருவாக உள்ள இப்படத்தை 'ஸ்ரீ கோகுலம் மூவீஸ்' சார்பில் திரு. கோகுலம் கோபாலன் தயாரிக்கவுள்ளார்....
