சூரரைப் போற்று படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்
நடிகர் சூர்யா நடித்து வரும் படம் சூரரைப் போற்று. இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னை கிண்டியில் உள்ள பிரபல ஹோட்டலில் நடந்து வருகிறது.
சூர்யா தற்போது 'இறுதிச்சுற்று' பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் "சூரரைப்போற்று" படத்தில் நடிக்கிறார். சூர்யாவின் 38-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பாடலாசிரியர் விவேக் பாடல்களை எழுதுகிறார்.இப்படம் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் 70-வது படமாகும். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படம் வரலாற்று படம் என்று செய்திகள் வெளியானது.
சூரரைப்போற்று படம் குறித்து பேசிய சூர்யா "சூரரைப்போற்று" வரலாற்று படம் என்று செய்திகள் பரவிவருகின்றன. ஆனால் இது உண்மையல்ல. இருப்பினும் இப்படத்தில் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி கதை உருவாக்கப...
