“ஜோக்கர்” திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய வேண்டும் – இயக்குநர் ராஜு முருகன் !!
ஜோக்கர் திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் ஆசை இருக்கிறது. தெலுங்கிலும் என்னை ரீமேக் செய்ய சொல்லி கேட்கிறார்கள். தயாரிப்பாளர் தரப்பில் இருந்து அதற்க்கான சரியான முயற்ச்சிகள் போய் கொண்டு இருக்கிறது. நான் எந்த மொழியில் ஜோக்கர் ரீமேக்கை இயக்குவேன் என்று கேட்கிறார்கள் அதை பற்றி இனிமேல் தான் முடிவு செய்ய வேண்டும் அதற்கான விஷயங்கள் அமையும் போது அதை பன்ன வேண்டும். என்னுடைய அடுத்த படத்திற்கான கதையை எழுதி கொண்டு இருக்கிறேன். அடுத்த படத்திற்கான கதை முற்றிலும் வேறு ஒரு களத்தில் பயணிக்கும் ஒரு கதையாக இருக்கும். குக்கூ ஒரு அழகான காதல் கதை , ஜோக்கர் சமூக அவலங்களை பற்றி பேசும் ஒரு படம். என்னுடைய அடுத்த படம் இதில் இருந்து முற்றிலும் வேறு களத்தில் இருக்கும். அந்த கதையை நான் இன்னும் எழுதி கொண்டு இருக்கிறேன், முழுவதையும் எழுதி முடித்த பின்னர் தான் அதை பற்றி கூற முடியும். நிறைய தயாரிப்பாளர்கள் தரப்பில் இர...
