தாய்ப்பாசத்தின் உச்சம் தொடும் படமாக உருவாகியுள்ளது ‘வென்று வருவான்’
புதுமுக நாயகன் வீரபாரதி .சமீரா, எலிஸபெத் , ராஜாராணி பாண்டியன், காதல் சுகுமார் . நெல்லை சிவா.வையாபுரி . கிரேன் மனோகர் நடித்துள்ள படம் தான் 'வென்று வருவான்'. இப் படத்தை எழுதி இயக்கி தன் ரியாலிட்டி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கிறார் விஜேந்திரன்.
படம் பற்றி அவர் கூறும்போது "இது ஒரு கிராமத்துக்கதை.செய்யாத 8 கொலைகளுக்கு நாயகன் மீது கொலைப்பழி விழுகிறது. தூக்கு மேடை வரை போகிறான். அதற்குள் தான் தன் தாய் பாடும் ஒரு பாடலை இறுதி விருப்பமாகக் கேட்க விரும்புகிறான். அவனது தாய் வரவழைக்கப் படுகிறாள்.அவள் அந்த ஊரில் நல்லதோ கெட்டதோ எந்த நிகழ்வாக இருந்தாலும். பாட்டுப்பாடும் பழக்கம் உள்ளவள். அவளோ அப்போது .உடல் நலிவுற்று கண் பார்வையும் இழந்து இருக்கிறாள். இருந்தாலும் தன் மகனின் விருப்பத்தை நிறைவேற்ற ஒரு பாடலைப் பாடுகிறாள். அது கேட்பவர்களின் செவியில் விழுந்து இதயம் உருக்கும் பாடல் .அவள் பாடிய பின...
