மர்மங்கள் நிறைந்த திரில்லரில் துப்பறியும் நிபுணராக நடிக்கும் விதார்த்
கூத்துப் பட்டறை கலைஞனாக வாழ்வை ஆரம்பித்த நடிகர் விதார்த் சினிமாவில் தான் தேர்ந்தெடுக்கும் வித்தியாசமான கதைகள் மூலம் தன்னை ஒரு நல்ல நடிகனாக வளர்த்து கொண்டிருக்கிறார். அவர் தேர்ந்தெடுக்கும் களங்கள் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் தனிச்சிறப்பு வாய்ந்ததாக, உலக ரசிகர்களை ஒருங்கே ஈர்க்கும் விதமாக இருக்கிறது. அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் பெரும்பாலும் நல்ல கருத்துக்களையே வெளிப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் அவர் தற்போது ஒரு புதிய களத்தில் புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் இவர் துப்பறிபவராக நடிக்க உள்ளார். நிறைய மர்மங்கள் நிறைந்த இந்த திரில்லர் திரைப்படத்தை புதுமுக இயக்குனர் மனோஜ் ராம் இயக்கப் போகிறார். இவர் பிரபல இயக்குனர் ஷக்தி சௌந்தரராஜனிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர். இப்படத்தின் திரைக்கதை தமிழுக்கு முற்றிலும் புதிதான களத்தில் முழுக்க, முழுக்க மர்மங்கள் நிறைந்ததாக வடி...
