Sunday, June 21
Shadow

Tag: நாள்

பிறந்த நாள் பரிசு ரசிகர்களுக்கு கார்த்தி வேண்டுகோள்

Latest News, Top Highlights
அமீர் இயக்கிய பருத்தி வீரன், படத்தின் மூலம் மூலம் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. இவர் தமிழ் சினிமாவில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்துள்ளார். இன்று 44-வது பிறந்தநாளைக் கொண்டாடும் கார்த்தி, ரசிகர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்., அன்புத் தம்பிகள் அனைவருக்கும் வணக்கம்! இந்த கொரோனா (Coronavirus) சூழல் இதுவரை நாம் கண்டிராத அளவுக்கு மிகக் கடுமையாக உள்ளது! அரசாங்கமும், மருத்துவர்களும் நமக்கு அறிவித்துள்ள, 'மாஸ்க் அணிதல், சானிடைசர் பயன்படுத்தல், தனி மனித இடைவெளியைக் கடைபிடித்தல், வசிப்பிடத்தை விட்டு வெளியே செல்லாமல் இருத்தல் போன்ற பாதுகாப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி; தம்பிகள் ஒவ்வொருவரும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்'. இதுவே இந்தப் பிறந்தநாளுக்கு எனக்கு நீங்கள் தரும் பரிசாக இருக்கும்!” என்று நடிகர் கார்த்தி (Karthi) தெரிவித்துள்ளார்.  ...

நடிகர் பிரகாஷ் ராஜ் பிறந்த நாள் பதிவு

Birthday, Top Highlights
பிரகாஷ் ராஜ், இந்தியாவின் 2 தேசிய விருது பெற்ற திரைப்பட நடிகர் ஆவார். இவர் கன்னடம், தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது காஞ்சிவரம் தமிழ் திரைப்படத்துக்காக 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளார். அத்துடன் இவர் இருவர் தமிழ்த் திரைப்படத்துக்காக 1998 ஆம் ஆண்டுக்கான சிறந்த துணை நடிகர் விருதையும் பெற்றிருக்கிறார். இவர் நடித்த படங்கள்  இருபத்தியாறு 26, இதயம் முரளி, அழியாத கோலங்கள், மத கஜ ராஜா, சில சமயங்களில், அக்னி சிறகுகள், தேவ், செய், சொல்லிவிடவா, செக்கச்சிவந்த வானம், நடிகையர் திலகம், 60 வயது மாநிறம், வனமகன், ரிச்சி, யாக்கை, மனிதன், தோழா, கடவுள் இருக்கான் குமாரு, கோ 2, ஜே கே என்னும் நண்பனின் வாழ்கை, பூலோகம், ஒகே கண்மணி, தூங்காவனம், ருத்ரமாதேவி, உன் சமையலறையில், கதை திரைக்கதை வசனம் இயக்கம், தில்லு முல்...