நெற்றிக்கண் திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)
சிபிசிஐடி அதிகாரியான துர்காவுக்கு (நயன்தாரா) ஒரு விபத்தில் பார்வை பறிபோவதுடன் நெற்றிக்கண் படம் துவங்குகிறது. அதே விபத்தில் துர்காவின் சகோதரர்(சச்சின் நாச்சியப்பன்) இறந்துவிடுகிறார். பார்வை இழந்தாலும் தனியாக வாழ கற்றுக்கொள்கிறார் துர்கா.
பெண்களை கடத்தி, கொடுமைப்படுத்தும் சைக்கோவை(அஜ்மல் அமீர்) கண்டுபிடிக்க வேண்டியபோது தான் துர்காவுக்கு பெரிய சோதனை ஏற்படுகிறது.
2011ம் ஆண்டு வெளியான கொரிய படமான பிளைண்டின் ரீமேக் தான் நெற்றிக்கண். படத்தின் பெரும்பாலான காட்சிகளில் நம்மை இருக்கையின் நுனியில் வைத்திருக்கிறார்கள். துர்காவின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதம் அழகு. சில இடங்களில் டென்ஷனில் நகத்தை கடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.
வில்லன் துர்காவை பின் தொடர்ந்து கடத்த முயன்று சேஸில் முடிவது த்ரில்லாக இருந்தது. ஹீரோயின் லேடி சூப்பர் ஸ்டார் என்பதால் சில மாஸ் தருணங்களை வைத்திருக்கிறார் இயக்குநர்.
...
