பலூன் – விமர்சனம்
ஜெய்யும் அஞ்சலியும் காதலித்து திருமணம் ஆனவர்கள். ஜெய்யின் அண்ணன் சுப்பு பஞ்சு, அவரது சிறு வயது மகன் இவர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள். சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார் ஜெய். இவர் கதையை கேட்ட தயாரிப்பாளர் ஒருவர், இந்த கதை வேண்டாம் வேறு எதாவது பேய் கதை வேண்டும் என்று கேட்கிறார்.
என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் ஜெய், ஊட்டியில் உள்ள ஒரு வீட்டில் பேய் இருப்பதாக அறிகிறார். இதைப் பற்றி தெரிந்துக் கொண்டு படமாக்கலாம் என்று நினைத்து, மனைவி அஞ்சலி, அண்ணன் மகன் பப்பு, ஜெய்க்கு உதவி இயக்குனராக இருக்கும் யோகி பாபு மற்றும் உதவியாளர் ஒருவரையும் அழைத்துக் கொண்டு ஊட்டிக்கு செல்கிறார் ஜெய்.
அங்கு பேய் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் தங்குகிறார். அந்த வீட்டில் குட்டி பையன் பப்புவின் கண்களுக்கு மட்டும், ஒரு குட்டி பெண் குழந்தை தெரிகிறது. மேலும், அந்த குழ...
