பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை: பிரபல நடிகை விளக்கம்
தமிழில் சித்து பிளஸ் 2 படத்தின் மூலம் அறிமுகமானவர் சாந்தினி. அவர் நடித்த ஒன்பது படங்கள் ரிலீசுக்கு தயாராகவுள்ள நிலையில், அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக ஒரு தகவல் வெளியானது.
இது தொடர்பாக சாந்தினி அளித்த பேட்டியொன்றில், பிக் பாஸ் குழு தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், தான் இன்னும் அது தொடர்பாக முடிவெடுக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார். அதன்படி, தற்போது சாந்தினி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்து விட்டதாக கடந்த சில நாட்களாக ஒரு தகவல் இணையத்தில் உலா வருகிறது.
ஆனால், தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று சாந்தினி தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தன்னை அழைக்கவும் இல்லை, தான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதுமில்லை என தற்போது அவர் கூறியுள்ளார்....



