Sunday, December 8
Shadow

தனது அடுத்த படம் இது தான்: ஓவியா

`களவாணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. தனது முதல் படத்திலேயே அனைத்து தரப்பினரையும் கவர்ந்திருந்தார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும், `கலகலப்பு’ அவருக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது.

பின்னர் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரையும் கவர்ந்துள்ளார். மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியிருக்கும் ஓவியா, தற்போது ராகாவா லாரன்சுடன் காஞ்சனா 3 படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதுதவிர விஷ்ணு விஷாலுடன் சிலுக்குவார்பட்டி சிங்கம் மற்றும் ஓவியாவ விட்டா வேற யாரு சீனி படத்தில் நடித்து டுடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், டிகே இயக்கத்தில் `காட்டேரி’ படத்தில் ஒப்பந்தமான ஓவியாவுக்கு பதிலாக ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், ரசிகர்களுடன் டுவிட்டரில் உரையாடல் நடத்திய ஓவியா, ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அதில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் தான் அடுத்து நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் ஓவியா கூறியிருக்கிறார்.

Leave a Reply