

போனிகபூர் தயாரிப்பில் அஜீத், ஹிமா குரேஷி, சுமித்ரா, கார்த்திகேயா, சுந்தர் நடித்துள்ள படம் வலிமை படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.
அர்ஜுன் (அஜீத்) ஒரு சிறப்பான காவல்துறை அதிகாரி. குற்றம்செய்பவர்களின் கையை உடைத்துவிட்டு, அவர்கள் குடும்பத்திற்கு பணம் உதவிசெய்யும் நல்ல மனம் படைத்தவர். ஆனால், அண்ணன் குடிகாரர். தம்பிக்கு வேலையில்லை. இந்தச் சூழலில் சென்னையில் பெரும் குற்றங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன. சங்கிலி பறிப்பு சம்பவங்கள், போதைப் பொருள் தொடர்பான நிகழ்வுகள், கொலைகள் பெரும் எண்ணிக்கையில் நடக்கின்றன.
இந்தக் குற்றங்களைத் தடுக்கும் பொறுப்பு அர்ஜுனுக்கு வழங்கப்படுகிறது. மூன்று குற்றங்களையும் செய்வது ஒரே கும்பல் என்பதைக் கண்டுபிடிக்கிறார் அர்ஜுன். புலனாய்வு முக்கிய கட்டத்தை நெருங்கும்போது ஒரு திருப்பம். அர்ஜுனின் குடும்பமே பெரும் அபாயத்தில் சிக்குகிறது. அர்ஜுன் என்ன செய்கிறார் என்பது மீதிக் கதை.
படத்தின் துவக்கமே பரபரப்பாக அமைந்திருக்கிறது. பைக்குகளை வைத்து நடக்கும் குற்றங்களை முதல் காட்சியிலேயே விறுவிறுப்புடன் காட்சிப்படுத்தி அசரவைத்திருக்கிறார் இயக்குனர். இதற்கடுத்து, இந்தக் குற்றங்களைத் தடுக்க அர்ஜுன் என்ற காவல்துறை அதிகாரியாக அஜீத் வருகிறார் என்று சொல்லவும், படம் இன்னும் சூடுபிடிக்கிறது. பிறகு, பரபரப்பான பைக் துரத்தல் காட்சிகள், விறுவிறுப்பான ஆக்ஷன் என யோசிக்கவே நேரம் கொடுக்காமல் பரபரக்கிறது திரைக்கதை. இடைவேளையை நெருங்கும்போது ஒரு திருப்பம்.
அந்தத் திருப்பம் திரைக்கதைக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த திரைப்படத்திற்குமான திருப்பமாக அமைந்துவிடுகிறது. இடைவேளைக்குப் பிறகும் சண்டைக் காட்சிகளும் துரத்தல் காட்சிகளும் வந்தாலும், படம் தன் விறுவிறுப்பை ஏற்படுத்துகிறது படத்தின் பலம் பிரமாண்டம் ஒளிப்பதிவு காட்சியமைப்பு படம் க்ளைமாக்ஸை நெருங்கும்போது, 80களில் வரும் திரைப்படங்களைப் போல கதாநாயகனின் குடும்பத்தையே ஒரு இடத்தில் வில்லன் கட்டித் தொங்கவிட்டு, கொல்லப்போவதாக மிரட்டுகிறார். கதாநாயகன் சரியான நேரத்தில் வந்து காப்பாற்றுகிறார். படம் பார்ப்பவர்களுக்கு, ஹீரோ ஒரு அரை மணி நேரம் முன்னால் வந்திருக்கலாமே என்று தோன்றுகிறது.
படத்தில் வில்லனின் செயல்பாடுகளையும் காவல்துறையின் புலனாய்வையும் அதிநவீனமாகக் காட்ட முயற்சித்திருக்கிறார் இயக்குனர். ஆனால், ஒரு கட்டத்திற்குமேல் இந்தக் காட்சிகள் நம்பகத்தன்மையை இழந்துவிடுகின்றன. காவல்துறைக்குள் நடப்பதாக காட்டப்படும் சம்பவங்களும் குற்றங்களை விசாரிக்கும் விதமும் மிக மேம்போக்காக அமைந்திருக்கின்றன.
ஒரு காட்சியில், குற்றவாளிகளை கதாநாயகன் சிறையிலிருந்து எங்கோ அழைத்துச் செல்லும்போது வில்லனின் ஆட்கள் ஏகப்பட்ட பைக்குகளில் வந்து மீட்டுச் செல்கிறார்கள். கதாநாயகன்தான் சண்டைபோட்டு அதைத் தடுக்க முயல்கிறார், படுகாயமடைகிறார். முடிவில் அவரை துணை ஆணையர் பதவியிலிருந்து இறக்கம் செய்து ஆய்வாளராக மாற்றிவிடுகிறார்கள்.
ஆனால், வில்லன் கதாநாயகனையும் நம்மையும் விடுவதாக இல்லை. காவல்துறைவசம் உள்ள ஒரு டன் கொக்கைனை மீட்டுத்தந்தால்தான் நாயகனின் குடும்பத்தை விடுதலைசெய்வேன் என கொக்கரிக்கிறான். இதற்குப் பிறகு கதாநாயகன் மேற்கொள்ளும் முயற்சிகள் எல்லாம் நம்மை அயர்ச்சியடைய வைக்கின்றன.
இன்றைய இளைஞர்களுக்கு மிக பெரிய ஒரு பாடத்தை சொல்லி இருக்கும் படம் வலிமை வலிமையான கருத்தை வலியுறுத்தும் ஒரு படம் .
படத்தின் பிளஸ்:
படத்தில் சண்டைக் காட்சிகளும் துரத்தல் காட்சிகள், நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு
படத்தின் மைன்ஸ்:
கொஞ்சம் இல்லை நிறைய சென்டிமென்ட் படத்தின் நீளம்
மொத்தத்தில் குடுப்பத்துடன் அனைவரும் பார்க்கும் ஒரு ஆக்ஷன் படம் சண்டைக் காட்சிகள் அஜீத் ரசிகர்களை வெகுவாகக் கவரும்.
