Sunday, June 21
Shadow

Tag: வில் சுமித்

ஹாலிவுட் நடிகர் வில் சுமித் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
வில் ஸ்மித் (Will Smith) (பிறப்பு விலர்ட் கிரிஸ்தஃபர் ஸ்மித் ஜூனியர் புகழ்பெற்ற அமெரிக்க ராப் இசைப் பாடகரும் திரைப்பட நடிகரும் ஆவார். "உலகில் மிக வன்மையான நடிகர்" என்று அமெரிக்காவின் நியூஸ்வீக் இதழ் குறிப்பிட்ட வில் ஸ்மித் பல கிராமி விருதுகளை வென்றுள்ளார். ஒரு தங்கக் கோள் விருதுகள், இரண்டு ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஃபிலடெல்ஃபியா, பென்சில்வேனியாவில் பிறந்து வளந்த வில் ஸ்மித் 1980களில் "ஃப்ரெஷ் பிரின்ஸ்" (Fresh Prince) என்ற பெயரில் ராப் பாடல்களை படைத்தார். இவரும் இவரின் நண்பர் டிஜே ஜாசி ஜெஃப்பும் சேர்ந்து ராப் உலகில் புகழுக்கு வந்தனர். 1988இல் இவர் முதலாம் ராப் கிராமி விருதை வென்றுள்ளார். 1990இல் ஃப்ரெஷ் பிரின்ஸ் அஃப் பெல் ஏர் என்ற தொலைக்காட்சித் தொடரில் முதலாக நடித்தார். 1990 முதல் 1996 வரை இக்காட்சி தொடர்ந்தது. இந்த தொடர் முடிந்து விட்டு இவர் தனியாக ராப் இசைத் தொகுப...