Tuesday, February 11
Shadow

ஹாலிவுட் நடிகர் வில் சுமித் பிறந்த தின பதிவு

வில் ஸ்மித் (Will Smith) (பிறப்பு விலர்ட் கிரிஸ்தஃபர் ஸ்மித் ஜூனியர் புகழ்பெற்ற அமெரிக்க ராப் இசைப் பாடகரும் திரைப்பட நடிகரும் ஆவார். “உலகில் மிக வன்மையான நடிகர்” என்று அமெரிக்காவின் நியூஸ்வீக் இதழ் குறிப்பிட்ட வில் ஸ்மித் பல கிராமி விருதுகளை வென்றுள்ளார். ஒரு தங்கக் கோள் விருதுகள், இரண்டு ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

ஃபிலடெல்ஃபியா, பென்சில்வேனியாவில் பிறந்து வளந்த வில் ஸ்மித் 1980களில் “ஃப்ரெஷ் பிரின்ஸ்” (Fresh Prince) என்ற பெயரில் ராப் பாடல்களை படைத்தார். இவரும் இவரின் நண்பர் டிஜே ஜாசி ஜெஃப்பும் சேர்ந்து ராப் உலகில் புகழுக்கு வந்தனர். 1988இல் இவர் முதலாம் ராப் கிராமி விருதை வென்றுள்ளார்.

1990இல் ஃப்ரெஷ் பிரின்ஸ் அஃப் பெல் ஏர் என்ற தொலைக்காட்சித் தொடரில் முதலாக நடித்தார். 1990 முதல் 1996 வரை இக்காட்சி தொடர்ந்தது. இந்த தொடர் முடிந்து விட்டு இவர் தனியாக ராப் இசைத் தொகுப்புகளை படைக்கத் தொடங்கினார். திரைப்படங்களிலும் 1995 முதல் நடிக்க தொடங்கினார். 1995ல் வெளிவந்த பாட் பாய்ஸ், 1996ல் வெளிவந்த இன்டிபென்டென்ஸ் டே ஆகிய திரைப்படங்களில் நடித்து ஹாலிவுட் உலகில் புகழுக்கு வந்தார்.

இவரின் வேறு சில புகழ்பெற்ற திரைப்படங்கள் மென் இன் பிளாக், ஐ, ரோபாட், த பர்சூட் அஃப் ஹாப்பினெஸ், மற்றும் ஹான்காக் ஆகும்.

வில் சிமித் 1992 இல் சிறி சம்பினோ (Sheree Zampino) என்பவரை மணமுடித்தார் . 1992 , கார்த்திகை 11 இல் ரெய் சிமித் என்னும் மகன் பிறந்தார். 1995 இல் சிமித், சிறி சம்பினோவை விவாகரத்து பண்ணினார். ரேயும் தந்தையின் வீடியோ ஆல்பம்களில் நடிக்கத்தொடங்கினார்.