Saturday, April 18
Shadow

Tag: ஸ்ரீவித்யா

நடிகை ஸ்ரீவித்யா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஸ்ரீவித்யா ஒரு புகழ்பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். கர்நாடக இசை பாடகி எம். எல். வசந்தகுமாரியின் மகள். இவர் 1970களில் இருந்து 2000களின் தொடக்கம் வரை நடித்து வந்தார். 2003ஆம் ஆண்டு மார்புப் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட இவர் 2006, அக்டோபர் 19ஆம் தேதி இறந்தார். திரைப்படத் துறையில் தங்களது அழகிய முகத்தாலும், மந்தகாச மேனியாலும், கொஞ்சும் குரலாலும், குறையில்லாத நடிப்பாலும் ரசிகர்களைக் கட்டிப்போட்டு, கவர்ந்து, தங்கள் வசம் இழுத்துக் கொள்பவர்கள் நடிகைகள். இவை அனைத்தும் ஒன்றாகப் பெற்று கலைத் துறையில் கம்பீரமாக நடைபோட்டவர்கள் மிகச் சிலரே. அதில் ஸ்ரீவித்யாவிற்கு அப்படிச் சில பேர்களில் நம் மனதில் தனி இடம் கொடுத்து நிச்சயம் போற்றப்பட வேண்டிய ஒரு சிறந்த நடிகைதான் ஸ்ரீவித்யா. சகல அம்சங்களுடனும் நம் தமிழ்த்திரை உலகில் மட்டுமில்லாமல் தென்னக திரைஉலகம் முழுமையுமே ஆக்கிரமித்து தன் விஸ்வரூப நடிப்பால...