
டேனியல் பாலாஜி நடிக்கும் “ 88 “ ஜூலை 21 ம் தேதி வெளியாகிறது.
A.ஜெயக்குமார் வழங்கும் ஜெ.கே.மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு "88" என்று பெயரிட்டுள்ளனர்.இந்தப்படத்தில் மதன் கதானாயகனாக நடிக்கிறார். கதானாயகியாக உபாஷ்னாராய் நடிக்கிறார். மற்றும் டேனியல் பாலாஜி ஜெயப்பிரகாஷ் ஜி.எம். குமார் பவர் ஸ்டார், அப்புகுட்டி, சாம்ஸ், எஸ்.பி.ராஜா ,கடம் கிஷன் ,மீராகிருஷ்ணன் இவர்களுடன் ஜான் விஜய் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இன்று விஞ்ஞானம் ரெக்கக் கட்டிப் பறக்கிறது.பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தப் பட்ட செல்போன்களின் பயன்பாடு இன்று எல்லை கடந்து விட்டது. கைக்குள்ளேயே ஒரு உலகத்தை கொண்டு வந்த நவீனம் தான் செல்போன். எதையெல்லாம் வெளிப்படையாக தெரிவிக்கக் கூடாதோ அதையெல்லாம் வெளிப்படையாக தெரிவிப்பதால் என்ன மாதிரியான சங்கடங்களை சந்திக்க நேரிடும் என்பதைத் தான் இதில் அலசி இருக்கிறோம்..
ஜுலை மாதம் 21 ம் தேதி படம் வெளியாகிறது....