மீ டூ விவகாரம் ஏ.ஆர். ரகுமான் அதிர்ச்சி ரசிகர்களின் கிண்டல்
பாலிவுட் நடிகர் நானா படகேர் மீது தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் தெரிவித்ததையடுத்து பலரும் புகார் தெரிவிக்கிறார்கள். தற்போது மீ டூ இயக்கம் தீவிரம் அடைந்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ட்வீட்டியுள்ளார்.மீ டூ இயக்கத்தை கவனித்து வருகிறேன். தொல்லை கொடுத்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என்று சில பெயர்கள் எனக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. நம் துறை பெண்களுக்கு பாதுகாப்பானதாக மாறுவதை பார்க்க விரும்புகிறேன். தைரியமாக பேசும் அனைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாராட்டுக்கள்.
அனைவரும் பாதுகாப்புடன் பணியாற்றும் சூழலை நானும், என் அணியும் உருவாக்கி வருகிறோம். பாதிக்கப்பட்டவர்கள் பேச சமூக வலைதளங்கள் சுதந்திரம் அளிக்கிறது. ஆனால் அதை தவறாக பயன்படுத்திவிடாமல் இருக்க வேண்டும் என்று ட்வீட்டியுள்ளார் ரஹ்மான்.
ஏ. ஆர். ரஹ்மானின் சகோதரி ரைஹானா மீ டூ பற்றி கருத்து தெரிவித்தார். வைரமுத்து...
