பா.ம. க. தலைவர் ராமதாஸ் குடும்பத்தில் இருந்து வரும் சினிமா வாரிசு
பிரபல அரசியல் குடும்பத்திலிருந்து வரும் வாரிசுகள் தமிழ் சினிமா உலகில் கால்பதித்து சாதிப்பது புதிதல்ல. இவர்களுக்கு சினிமா நுழைவு சற்று எளிதாக இருக்கலாம் அனால் இவர்கள் மீது உருவாகும் மாபெரும் எதிர்பார்ப்பை இவர்கள் பூர்த்திசெய்வது பெரும் சவாலாக இருக்கும். டாக்டர் ராமதாஸ் அவர்களின் பேரன் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸின் ஒன்று விட்ட சகோதரனுமான(cousin) குணாநிதி, 'A Stroke Of Dissonance' என்ற முப்பது நிமிட குறும்படம் ஒன்றில் நடித்துள்ளார். இதன் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதிக்க உள்ளார். பல சர்வதேச திரை விழாக்களில் இக்குறும்படம் பங்கேற்க்கவுள்ளது.
இது குறித்து குணாநிதி பேசுகையில், '' சிறு வயதிலிருந்தே நடிப்பு பயிற்சி பட்டறைகளில் பங்கேற்றுள்ளேன். நடிப்பில் எனக்கு என்றுமே பேரார்வம் இருந்துள்ளது. 'Theatre lad' சார்பில் நிறைய மேடை நாடகங்கள் மற்றும் வீதி நாடகங்களில் நடித்துள்ளேன். எனது இந்த 'A...
