
தமிழ் சினிமாவுக்கு மிக சிறந்த பொற்காலம் என்று தான் சொல்லணும் கடந்த மூன்று வாரங்களாக மிக சிறந்த படங்கள் வந்தவண்ணம் உள்ளது அந்தவகையில் இந்த வாரம் மிக சிறந்த படம் ஒன்று அந்த பட்டியலில் இடம் பிடிக்கிறது என்று சொன்னால் மிகையாகது ஆம் சமுத்திரகனி மற்றும் ரம்யா பாண்டியன் நடிப்பில் வெளிவது இருக்கும் படம் தான் ஆண் தேவதை .மிக அருமையான குடும்ப சித்திரம் நீண்ட இடைவெளிக்கு பின் வந்து இருக்கும் குடும்ப கதை என்றும் சொல்லலாம்.
இயக்குனர் தாமிரா இவர் பாலச்சந்தர் சிஷ்யன் என்பதை மிக அழகாக நிருபித்துள்ளார்.தன் குருநாதரை போல நல்ல குடும்ப படத்தை அதுவும் பாலச்சந்தர் சொன்ன ஒரு பாடல் வரியில் இருந்து கதை கருவை தயார் செய்து இருப்பது அருமை வரவு எட்டணா செலவு பத்தணா என்ற பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்துள்ள படம் தான் ஆண் தேவதை அப்புறம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு ஆணை தேவதையாக காண்பித்து இருக்கிறார் இயக்குனர் தாமிரா
இன்றைய காலகட்டத்தில் அனைவரும் பார்க்கவேண்டிய படம் முக்கியமாக பெண்கள் பார்க்கவேண்டிய படம் ஒரு பெண் எப்படி இருக்கணும் எப்படி இருக்க கூடாது என்று மிக அருமையாக சொல்லி இருக்கும் படம் கூட நட்பு வாழ்கையை எப்படி சீர்குலைக்கும் என்பதயும் மிக தெளிவாக கூறியிருக்கிறார். தன் வரவுக்கு மீறிய ஆசை வாழ்கையை எப்படி சீர்குலைக்கும் என்பதை மிக தெளிவாக கூறியிருக்கும் படம் ஆடம்பரம் தான் வாழ்கையின் மிக பெரிய எதிரி என்றும் கூறியிருக்கிறார் இயக்குனர்.
ஒரு ஆண் நினைத்தால் குடும்பத்தை நடத்த முடியும் வரவுக்கு ஏற்ப குடும்பத்தை நடத்த முடியும் பணம் மட்டுமே வாழ்கை இல்லை அதே போல பிறரை பார்த்து வாழ்வது தவறு என்பதையும் மிக அழகா சொல்லி இருக்கும் படம் வாழ்கையின் எதார்த்தை மிக தெளிவாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் தாமிரா பல இடங்களில் இயக்குனர் தாமிரா பாலச்சந்தர் சிஷ்யன் என்று தெளிவாக உணர்த்துகிறார்.
அப்பா படத்திற்கு பிறகு சமுத்திரகனி மீண்டும் முழுமையான குடும்ப கான்செப்ட் ஒன்றை உருவாக்கியுள்ளார். அவரது புதிய படைப்பான ஆண் தேவதை படதின் கதை, பல இடங்களில் நடக்கும் உண்மையான நிகழ்வுகளை பற்றி பேசுகிறது. படத்தில், வழக்கம்போலவே சமுத்திரகனி, சிறந்த நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். இவரது டயலாக் டெலிவரி பல இடங்களில் கைத்தட்டல்களை பெறுகிறது.
இந்த படத்தில் நடித்துள்ள ரம்யா பாண்டியன் முக்கியமான கேரக்டரில் நடித்து உள்ளார். படம் முழுவதும் வரும் வகையில் இவர் கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளது. ஜெஸ்ஸி என்ற கேரக்டரில் அவர் சிறப்பாக பொருத்தி விடுவதோடு, தனது நடிப்பையும் சிறப்பாக வெளிபடுத்தியுள்ளார். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள எமோஷனல் காட்சிகள் சிறப்பாகவே உள்ளது. சமுத்திரகனி, ரம்யா பாண்டியன் காம்பினேஷன், லவ் சீன்கள் மட்டுமின்றி எமோஷனல் காட்சிகளிலும் சரியாக பொருந்தியுள்ளது.
இந்த படத்தில் தேவையில்லாமல் எந்த ஒரு காட்சியும் இடம் பெறவில்லை. காசி விஸ்வநாதன் சரியான இடங்களில் எடிட் செய்துள்ளார். படத்தில் வரும் சப்போர்ட்டிங் கேரக்டர்களான விஜய்டிவி புகழ் அறந்தாங்கி நிஷா, காளி வெங்கட் ஆகியோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்துள்ளனர். சிறப்பான ரோலில் நடித்துள்ள சுஜா வருணி, தனது நடிப்பால் பல காட்சிகளில் ஸ்கோர் செய்துள்ளார். குழந்தை நட்சத்திரமான கவின் மற்றும் மோனிசா ஆகியோரும் எமோஷனல் காட்சிகளில் தங்கள் முடிந்த அளவு சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளனர்
மொத்தத்தில் ஆண் தேவதை அழகு அனைவரும் ரசிக்கும் தேவதை Rank 4/5
