மீசையைமுறுக்கு – திரைவிமர்சனம் இளைஞர்களின் (கெத்து) Rank 4/5
இளைஞர்கள் தமிழ் சினிமாவை கைவிட்டது இல்லை அந்த வகையில் ஆதி என்ற இளைஞன் தமிழ் சினிமாவுக்கு மிக பெரிய பொக்கிஷம் என்று மீசையை முறுக்கி சொல்லலாம் அந்த அளவுக்கு ஒரு மிக சிறந்த படத்தை கொடுத்துள்ளார் என்று சொல்லலாம் தமிழியில் வந்த உண்மைகதை ஆதியின் வாழ்கை வரலாற்றை படம் என்ற சொன்னபோது எல்லோரும் முகம் சுளித்து இருப்பார்கள் ஆனால் படம் பார்த்துவிட்டு வெளியில் வரும்போது ஆதி மேல் மிக பெரிய மரியாதை வரும் என்பதை தைரியமாக சொல்லலாம்.
கோவையில் இருந்து இசையில் சாதிக்கபோறேன் என்று சென்னை வந்த ஆதி இசையில் மட்டும் இல்லை ஒரு சிறந்த நடிகனாக ஒரு கதையாசிரியராக ஒரு இயக்குனாராக வெற்றியை கண்டுள்ளார் என்று சொன்னால் மிகையாகது ஏன் தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு சகலகலாவல்லவன் என்றும் சொல்லலாம். இளைஞர்கள் மனதை புரிந்து ஒரு சிறந்த திரைகதை என்னதான் வாழ்கையை படமாக பண்ணாலும் சினிமாவுக்கு என்ற ஒரு யுக்தி உள்ளது அது தான் திரைகத...
