அதிக திரையரங்குகளை இலக்காக வைத்து ‘ஆட்டி’ ரிலீஸ் ஒத்திவைப்பு; ஜூன் 12 முதல் திரையரங்குகளில்!
அதிக திரையரங்குகளை இலக்காக வைத்து ‘ஆட்டி’ ரிலீஸ் ஒத்திவைப்பு; ஜூன் 12 முதல் திரையரங்குகளில்!
லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஆட்டி’ திரைப்படம் தற்போது தனது வெளியீட்டு தேதியை மாற்றிக் கொண்டுள்ளது. முதலில் ஜூன் 5ஆம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படம், தற்போது ஜூன் 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தப் படத்தை தயாரித்துள்ள இசக்கி கார்வண்ணன், படத்தின் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். காவல்துறை அதிகாரியாக அவர் நடித்துள்ள நிலையில், ‘அயலி’ தொடரின் மூலம் கவனம் பெற்ற அபி நட்சத்திரா கதாநாயகியாக நடித்துள்ளார். காதல் சுகுமார், சௌந்தர், பிரவீன் பழனிச்சாமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.
பெண்களின் உரிமை, சமூகத்தில் அவர்கள் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் வரலாற்று காலங்களில் பெண்கள் முன்னின்று போராடி பெற்ற வெற்றிகளை மையப்படுத்...
