Sunday, June 7
Shadow

Tag: #aayirathiliruvar #vinay #saran #

‘ஆயிரத்தில் இருவர்’ –  திரை விமர்சனம் Rank 2.5/5

‘ஆயிரத்தில் இருவர்’ – திரை விமர்சனம் Rank 2.5/5

Review
பல வெற்றிப் படங்களை கொடுத்த சரண் இயக்கத்தில், வினய் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘ஆயிரத்தில் இருவர்’. செந்தட்டிக்காளை, செவத்தக்காளை என்ற இரட்டை பிறப்புக்களான வினய்கள், அம்மாவின் கருவில் இருக்கும்போதே நீயா? நானா? என்று போட்டிக்கொண்டு பிறக்கிறார்கள். வளரும் போதும் அதே மோதலுடனே வளரும் இவர்களில் ஒரு வினய், பங்காளி பகையால் செய்யப்பட்டுவிட்டதாக அவரது பெற்றோர் நினைக்க, அந்த கோபத்தில் வினயின் அப்பா, தனது பங்காளியை போட்டு தள்ளிவிட்டு ஆந்திராவில் தலைமறைவாகி விடுகிறார். அதே ஆந்திராவில் உயிரிழந்துவிட்டதாக நினைத்த தனது மகனையும் சந்திக்கும் அவர், தனது மகன் உயிருடன் இருப்பது பங்காளி குடும்பத்திற்கு தெரிந்தால் விபரீதமாகிவிடும் என்பதால், தன்னுடனேயே வினயை ஆந்திராவில் தங்க வைத்துக்கொள்வதுடன், அந்த விஷயத்தை தனது மனைவி உள்ளிட்ட யாரிடமும் சொல்லாமல் மறைத்து விடுகிறார். இப்படி அம்மா...