அறிமுக இயக்குனர் வினோத் இயக்கதில் சிபிராஜ் நடிக்கும் புதிய படம்
நாய்கள் ஜாக்கிரதை', 'ஜாக்சன் துரை' என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து, வர்த்தக உலகில் தனக்கென ஒரு நிலையான அங்கீகாரத்தை பெற்று வருகிறார் நடிகர் சிபிராஜ். மேலும் இவரின் அடுத்த திரைப்படங்களான 'கட்டப்பாவ காணோம்' மற்றும் 'சத்யா' ஆகிய படங்களும், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. தரமான கதை, அதே சமயத்தில் வர்த்தக வெற்றிக்கு தேவையான சிறப்பம்சங்களையும் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சிபிராஜ், தற்போது அறிமுக இயக்குநர் வினோத் இயக்க இருக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இவர் இயக்குநர் V.Z துரையிடம் இணை இயக்குநராகவும், விளம்பர பட இயக்குநராகவும் பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதிரடி கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்த தலைப்பிடப்படாத படத்தை, 'பாஸ் மூவீஸ்' சார்பில் விஜய் கே செல்லையா தயாரிக்கிறார். ஒளிப்பதிவாளர் அரவிந்த், இசையம...
