அரசு உதவி பெறும் பள்ளியில் அஜித் ரசிகர்கள் அமைத்த நூலகம்
தமிழ் சினிமாவின் தல என்று செல்லமாக அழைக்கப்படும் அஜித் இவருக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.இவர்கள் தல அஜித் போலவே அமைதியாக நற்பணிகள் செய்து வருகின்றனர். இத்தனைக்கும் ரசிகர் மன்றம் எல்லாம் இல்லாமல் என்பது குறிப்பிடத்தக்கது.குறிப்பாக ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். சமீபத்தில் இவர்கள் செய்த மிக பெரிய சாதனை என்ன தெரியுமா
பாளையங்கோட்டையில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் நூலகத்தை அஜித் ரசிகர்கள் அமைத்துள்ளனர். சுமார் 500 புத்தகங்களுடன் சிறுகுழந்தைகளுக்கான நல்லொழுக்க கதைகள்,சிறு கதைகள்,பழக்கவழக்கங்கள் மேம்படுத்தும் புத்தகங்கள் ஆகியவை அடங்கியவாறு நூலகத்தை வடிவமைத்துள்ளனர். இந்த நூலகத்தை மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பேரன் சலீம் திறந்து வைத்தார். வரும் காலங்களில் கூடுதல் புத்தகங்களுடன் இந்த நூலகம் இயங்க வசதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகிறது. நல்லெண்ணந்துடன் நூலகத்தை தி...
