Monday, May 25
Shadow

Tag: #ajith #shamili

நீண்ட இடைவெளிக்கு பின் நாயகியான அஜித் மச்சினிச்சி ஷாமிலி

நீண்ட இடைவெளிக்கு பின் நாயகியான அஜித் மச்சினிச்சி ஷாமிலி

Latest News, Top Highlights
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஷாமிலி. பிரபல முன்னணி நாயகி ஷாலியின் தங்கை, அஜித்தின் மைத்துனியாக இருந்தாலும், நாயகியான பின் அவரால் பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை. 2009-ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த 'ஓயே' படத்தில் நாயகியாக நடித்தார். அதன்பிறகு ஆறு வருடங்கள் கழித்து மலையாளத்தில் ஒரு படத்தில் நாயகியாக நடித்தார். அதன் பிறகு இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழில் 'வீர சிவாஜி' படத்தில் நாயகியாக நடித்தார். மூன்று மொழிகளில் கதாநாயகியாக அறிமுகமானாலும் கடந்த இரண்டு வருடங்களாக எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்தார். இப்போது 9 வருடங்கள் கழித்து 'அம்மம்மாகாரி இல்லு' என்ற தெலுங்குப் படத்தில் நாக சௌரியா ஜோடியாக நடித்திருக்கிறார். இந்தப் படமாவது வெற்றியாக அமைந்து ஷாமிலி முன்னணி நாயகியாக வருவாரா ?...