விஜய் – அஜித் நேரடி மோதல்
நானும் அவரும் கட்டை விரலும் கடன் பத்திரமும் போல’ என்று கூறி வருகிற பல ஹீரோக்கள், உள்ளுக்குள் அந்த விரலையே கடித்துத் துப்புகிற அளவுக்கு பகமை சேர்ப்பது சினிமாவில் சகஜம். இப்படி ஒண்டிக்கு ஒண்டி நட்பாக இருப்பதை போல பாவனை காட்டி வரும் விஜய்யும் அஜீத்தும் பல விஷயங்களில் எதிரும் புதிரும்தான். இந்த அதிர்ச்சி ஏதோ நேற்று முந்தா நாள் நடந்ததல்ல. அப்பவும்… இப்பவும்… எப்பவும் அதே நிலைதான் பல வருஷங்களாக! அந்த பகைமையின் இளம் நெருப்பில் இன்னும் சில சுள்ளிகளை போட்டுவிட்டது நிலைமை.
அட்லீ இயக்குகிற விஜய் 61 படத்தின் பப்ளிசிடிக்காக அஜீத்தின் மேனேஜர்தான் நியமிக்கப்பட்டாராம் முதலில். பொதுவாக தான் நடிக்கும் படத்தின் மற்ற மற்ற டெக்னீஷியன்களை கவனித்து பார்க்கும் ஹீரோக்கள், இதுபோன்ற சின்ன விஷயங்களில் கவனம் செலுத்துவதில்லை. அப்படிதான் உள்ளே நுழைந்தாராம் அஜீத்தின் மேனேஜர். இவரும் அட்லீயும் பல வருஷத்து பிரண்ட்ஸ். அந...
