ஆந்திரா மெஸ் – திரைவிமர்சனம் ( சுவை ) Rank 3/5
தமிழ் சினிமாவில் பல புது இயக்குனர்கள் வருகிறார்கள் பல வெற்றி படங்களை கொடுகிறார்கள் ஆனால் புதுசா கொடுப்பர்வர்கள் என்றால் அது ஒரு சிலர் என்று தான் சொல்லணும் அந்த வகையில் புது வித கதை அருமையான மேக்கிங் தமிழ் படமா என்று வியக்க வைக்கும் காட்சி அமைப்புகள் கொண்ட ஓர் மெல்லிய உணர்வோட்டத்துடன் கூடிய ‘பிளாக் காமெடி’ படம். தான் ஆந்திரா மெஸ்
படத்தின் இயக்குனர் ஜெய் முதல் முயற்சி அருமை என்று தான் சொல்லணும் காரணம் கதை திரைக்கதையோடு சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுடன் வளம் வந்துள்ளார். சிறந்த ஒரு பொழுதுபோக்கு படம் தான் ஆந்திரா மெஸ்
படத்தின் கதாபாத்திரங்களும் சரி நட்சத்திரங்களும் சரி மிக அருமை இதற்கும் இயக்குனரை பாராட்டனும்.
இந்த படத்தில் ராஜ்பரத், தேஜஸ்வினி, ஏ.பி.ஸ்ரீதர், பூஜா தேவரியா, மதி, பாலாஜி, வினோத், அமர், சையத் மற்றும் பலர் நடிஒளிப்பதிவு முகேஷ்.ஜி பிரசாந்த் பிள்ளை இசையில் அறிமுக இயக்குனர் ஜ...


