“அங்கீகாரம்” வெற்றிக்கு ரசிகர்களே காரணம்; நல்ல படங்களை மக்கள் கைவிடவில்லை – நெகிழ்ச்சியுடன் பேசிய படக்குழு
“அங்கீகாரம்” வெற்றிக்கு ரசிகர்களே காரணம்; நல்ல படங்களை மக்கள் கைவிடவில்லை – நெகிழ்ச்சியுடன் பேசிய படக்குழு
முதல் வார திரையரங்கு வெளியீட்டிலேயே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் உற்சாகமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட படக்குழுவினர், திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு ஊடகங்களுக்கும் ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து, படத்தின் உருவாக்கப் பயணம் மற்றும் வெற்றிக்குப் பின்னால் இருந்த உழைப்பைப் பகிர்ந்து கொண்டனர்.
நடிகர் ஆண்டனி பேசுகையில், ‘அங்கீகாரம்’ திரைப்படம் கிராமப்புற விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும், அவர்களின் போராட்டங்களையும் உண்மைத்தன்மையுடன் பதிவு செய்திருப்பதாகக் கூறினார். இப்படம் விளையாட்டு உலகில் இருப்போருக்கு மட்டுமல்ல, வாழ்க்கையில்...
