நண்பன் சிவகார்த்திகேயனுக்காக தன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளிவைத்த அனிருத்
சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் மிக நெருங்கிய நண்பர்கள் தன் நண்பனின் படம் சீமராஜா படத்தின் இசைவெளியீடுயும் அனிருத் படத்தின் கோலமாவு கோகிலா படத்தின் இசை வெளியீடும் ஒரே தேதி என்று தெரிந்தது அனிருத் மற்றும் நயன்தாரா தங்களின் படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்துள்ளனர்
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், நெப்போலியன், லால், சூரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘சீமராஜா’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஆகஸ்ட் 3) பிரம்மாண்டமாக நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு, நேற்றிரவு 8 மணியளவில் ‘சீமராஜா’ டீஸர் இணையத்தில் வெளியிடப்பட்டது.
முன்னதாக, ‘கோலமாவு கோகிலா’ படத்துக்காக அனிருத் இசையமைத்து, நடித்திருக்கும் ‘திட்டம் போடத் தெரியல’ விளம்பரப் பாடல் நேற்று (ஆகஸ்ட் 3) வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது.
‘சீமராஜா’ டீஸர் வெளியாவதால் அனிருத் தனது...
