அஞ்சலி நடிக்கும் சூப்பர்நேச்சுரல் த்ரில்லர் ‘ஓ’
திகில் படங்கள் மற்றும் சூப்பர்நேச்சுரல் த்ரில்லர் படங்கள் எல்லா வெள்ளிக்கிழமைகளில் திரையரங்குகளில் தவறாமல் ரிலீஸ் ஆகி வருகின்றன. ஒரு கட்டத்தில் ரசிகர்கள் இந்த வகை படங்களை பார்த்து சோர்ந்து விட்டார்கள் என்றே கூறலாம். ஆனால், இந்த வகை படங்களை ரசிக்கும் தீவிர ரசிகர்கள் எப்பொழுதும் 'மீண்டும் உயிர் பெறச்செய்யும் தருணத்தின்' தேவையை எப்போதும் உணர்ந்திருக்கிறார்கள். நமக்குள் ஒரு விதமான அதிர்ச்சியுடனும் மயக்கத்தோடும் அனுபவமற்ற அனுபவங்களை வழங்குவதன் மூலம் இந்த வகை படங்கள் மறுமதிப்பீடு செய்யப்படுகிறது. திரைப்பட இயக்குனர் பிரவீன் பிக் காட், சொல்லும் ஒரு விளக்கப்படம் இது. இது ஒரு மிகைப்படுத்திய உச்சரிப்பு அல்ல, ஆனால் தயாரிப்பாளர் அஜய் பணிக்கர் அவர்கள் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள்.
" எங்கள் நிறுவனத்தின் இரண்டாவது படம் இது. இது மிகச்சிறந்த படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். 50க்கும் மேற்பட...
