திறமை, அழகு மற்றும் நேர்த்தியான பண்பால் வசியப்படுத்தும் ஆளுமை அம்ரிதா !
திறமை மற்றும் ஆற்றல் வளத்தை தாண்டி கவர்ந்து இழுக்கும் ஆளுமை எல்லோரையும் தன் வசம் வசியப்படுத்தும். அந்த மாதிரி உதாரணங்கள் மிகவும் அரிது, அதில் ஒருவர் தான் அம்ரிதா. படை வீரன் படத்தில் அவரின் நம்பிக்கை அளிக்கக்கூடிய திரை ஆளுமை மற்றும் பாராட்டை குவிக்கக் கூடிய நடிப்பை பார்த்தவுடன் அவர் கலைக்குடும்ப பின்னணியில் இருந்து வந்திருப்பார் அல்லது நடிப்பு பயிற்சி பெற்றவராக இருப்பார் என எல்லோரும் நினைத்தனர். ஆனால், "நான் பி காம் பட்டதாரி, என்னுடைய குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த முதல் ஆள் நான் தான். எந்த நாடக பின்னணியும் இல்லை, சில குறும்படங்கள், விளம்பர படங்கள், இசை ஆல்பங்களில் நடித்திருக்கிறேன், அது தான் எனக்கு படை வீரன் பட வாய்ப்பை பெற்று தந்தது" என சர்ப்ரைஸ் கொடுக்கிறார் அம்ரிதா.
மேலும் விரைவில் வெளியாக இருக்கும் காளி படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்...
