அனுமனும் மயில்ராவணனும்” 3D அனிமேஷன் திரைப்படம்.
முதல்முறையாக இந்தியாவில் தயாராகும் இதிகாசக் கதையம்சம் உள்ள் 3D அனிமேஷன் முழுநீளத் திரைப்படம் "அனுமனும் மயில்ராவணனும்". திருவிளையாடல், கர்ணன் போன்ற கடவுள், அசுரர் என அசத்தலான பாத்திரங்கள் திரையில் தோன்றி பல வருடங்களுக்குப்பின் மெய் சிலிர்ப்பூட்டும் பிரம்மாண்டங்கள் நிறைந்த படமாக உருப்பெற்றிருக்கிறது "அனுமனும் மயில்ராவணனும்".
உலகெங்கிலுமிருந்து 7 அனிமேஷன் கம்பெனிகள் பங்கு பெற்று பெரும் பொருள் செலவில் உருவாகி இருக்கும் எல்லா வயதினரும் பெரிதும் ரசிக்கும் படியாக அமைந்துள்ளது இந்த திரைப்படம். வெளி நாட்டவரது உதவி இருப்பினும், இப்படம் சென்னையில் தான் பெரும்பான்மையாக உருவானது என்பது குறிப்படத்தக்கது.
இப்படத்தின் இயக்குனர் டாக்டர் எழில்வேந்தன் ஒரு பல் மருத்துவர், அனிமேஷன் துறையில் உள்ள ஆர்வத்தால் அதை பயின்று பின் இங்கிலாந்து சென்று வார்னர் பிரதர்ஸ் உள்ளிட்ட பெரும் அமைப்புகளில் பணியாற்றி, அந்த அ...
